சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்துல்லாபுரம் அருகே சாலையில் சென்ற கார் மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.