ஆற்காட்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது!

ஆற்காடு டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பாபு (வயது 49) என்பவரை ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி கிரண் சுருதி ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் சுரேஷ் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி