காவேரிப்பாக்கம்: சாலை அமைக்கும் பணி... துவக்கிவைத்த அமைச்சர்

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில், 2025-26-ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் லதாநரசிம்மன் தலைமை தாங்கினார். ஆட்சியர் சந்திரகலா, வேலூர் மண்டல உதவிச் செயற்பொறியாளர் அம்சா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் வரவேற்றார். 

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி, பணிகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கம், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஓச்சேரி எம். பாலாஜி, பேரூர் செயலாளர் நரசிம்மன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி