ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, வேலூர் மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை இன்று (நவம்பர் 19) நேரில் ஆய்வு செய்தார். வேளாண் இணை இயக்குனர் செல்வராஜ், வட்டார வேளாண் உதவி இயக்குனர் அருணாகுமாரி, நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். விதை சுத்திகரிப்பு நிலையத்தில் எந்தவித குளறுபடிகளும் இருக்கக் கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தினார்.