அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அபாஜித்சிங் செல்போன் சிக்னல் ரத்தினகிரி காவல் நிலைய பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அரப்பாக்கம் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் அபாஜித்சிங் பிணமாக கிடந்தார்.
அவர் குளிக்க வந்தபோது, கால் தவறி குட்டையில் விழுந்து இறந்திருக்கலாம் என்றும், அவர் அணிந்திருந்த உடைகள், ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குட்டையின் அருகே இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரத்தினகிரி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.