சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு மேம்பாலப் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பணிகள் முழுமையடையாமலேயே மேம்பாலம் அவசர அவசரமாக திறக்கப்பட்டது. தற்போது, வேலூர் செல்லும் சாலையில் மேம்பாலப் பணிகள் தொடங்கியுள்ளதால், வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.