கலவையில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்!

கலவை பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ் தலைமையில் நடைபெற் றது. துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி, செயல் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் முறை குறித்து பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. துன்பத்தில் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவிட உதவி மைய எண் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கவும், இது போன்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் நிரோஷா, அ. தி. மு. க. நகர செயலாளர் கே. ஆர். சதீஷ், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும், வட்டார மருத்துவ அலுவலர், அங்கன்வாடி மேற்பார்வையாளர், மகளிர் குழு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், சைல்டுலைன் குழந்தை உறுப்பினர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி