வேலூர் மாவட்டம் பொன்னை அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பிரவீன் (33) மற்றும் ராஜா (25) ஆகியோரை போலீசார் கைது செய்து, லாரி மற்றும் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.