முக்கியமாக, சரக்குகளை கையாளும் வகையில் ரயில்வே ஷெட்டுகள் அமைப்பது, சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்களில் சரக்குகளை அதிக அளவில் கையாள வாய்ப்புள்ள இடங்களில் தனியார் பங்களிப்போடு புதிய முனையங்கள் அமைக்கப்படுகிறது. அதன்படி அரக்கோணம் ரயில் நிலையம் அருகே என்ஜினீயரிங் வொர்க்ஷாப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரயில்வே மற்றும் தனியார் பங்களிப்போடு, அதிநவீன புதிய சரக்கு ரயில் முனையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிநவீன ரயில்வே சரக்கு கையாளும் முனையத்தை நிறுவுவதற்கும், இயக்குவதற்கும் ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் இங்கு சரக்குகளை ஏற்ற, இறக்க நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்க தனி உரிமை அளிக்கப்பட்டுள்ளது.