வேலூர் சரக டிஐஜி தர்மராஜன், 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கும், ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சசிகுமார் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த அதிரடி பணியிட மாற்றங்கள் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.