ராணிப்பேட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் புள்ளிமான் ஒன்று பிப்ரவரி 14-ம் தேதி இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் இதனைப் பார்த்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை மற்றும் கால்நடைத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடைத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். மான் எப்படி இறந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.