ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா வழங்க ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆற்காடு வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.