இதில் ரெட்டிவலத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 33) என்பவருக்கும், கீழ்வீதி கிராமத்தை சேர்ந்த சூரியா (21) மற்றும் 17 வயது சிறுவனுக்கும் இடையே நடனமாடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது சூரியா மற்றும் சிறுவன் சேர்ந்து வெங்கடேசனை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குப்பதிவு செய்து சூரியா மற்றும் சிறுவனை கைது செய்தார்.