ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புக்காக நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பஸ் நிறுத்தங்கள், சந்தை, பள்ளி அருகே நிழற்குடைகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.