வேட்டாங்குளம் பழைய இரும்பு பொருட்கள் கடையில் தீ விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் வேட்டாங்குளம் பகுதியில் உள்ள பழைய இரும்புப் பொருட்கள் சேகரிக்கும் காயலாங்கடையில் பிப்ரவரி 12 ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த விபத்து குறித்து நெமிலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி