இந்த நிலையில் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து மெலிதாக அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவத்தொடங்கியது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த கோணிப்பைகள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானன.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.