திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் கல்லூரிக்கு செல்ல அன்று இரவு சித்தஞ்சி கிராமத்தில் இருந்து ஓச்சேரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோகன்ராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்வாச்சலம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.