ராணிப்பேட்டையில் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், நேர்முக உதவியாளர் ராஜராஜன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைநம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி