அரக்கோணம் சுந்தரம் தெருவில் கார்த்திக் என்பவரது வீட்டில் நேற்று வாஷிங் மெஷின் தீப்பிடித்து எரிந்தது. அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வாஷிங் மெஷின் முற்றிலும் சேதமடைந்தது. மின் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.