அரக்கோணம் அருகே பெருமுச்சி பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 39). இவர் சென்னை பெரம்பூ ரில் இருந்து அரக்கோணம் வரை வந்த புறந்கர் ரயிலில் வந்தார். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் உமாசங்கரின் விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.