அரக்கோணம்: ரயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

அரக்கோணம் மதுவிலக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மும்பை ரயிலில் வந்த அருண் மற்றும் முனீர் பாஷா ஆகிய இருவரை 10 கிலோ கஞ்சா மற்றும் 1000 வலி நிவாரணி மாத்திரைகளுடன் கைது செய்தனர். சென்னைக்கு பேருந்தில் செல்ல முயன்றபோது அவர்கள் பிடிபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி