நெமிலியில்அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக இன்று பிப்ரவரி 13ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாகும் முயற்சியை திமுக அரசு சீர்குலைக்கிறது என்றும், திமுக அரசை கண்டிக்கிறோம் என்றும் அதிமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன், மேற்கு ஒன்றிய செயலாளர் அருணாபதி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி