ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிபாக்கத்தில் உள்ள மக்ளின் கால்வாயில் சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான். அவளூர் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், அரக்கோணம் கிழவனத்தைச் சேர்ந்த 7 வயது மோனிஷ், பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்தபோது கால்வாயில் தவறி விழுந்து இறந்ததாக தெரியவந்துள்ளது. மோனிஷ் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.