அதில் அவர்கள் காவேரிப்பாக்கம் அருகே கடப்பேரியை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 21), பெரியகிராமத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (19) மற்றும் ஆற்காடு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (22) என்பதும், அவர்கள் திருட்டு மோட்டார்சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார்சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் ஓட்டிவந்த ஒரு மோட்டார்சைக்கிள் மற்றும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் 4 மோட்டார்சைக்கிள்களை உள்பட 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு