அணைக்கட்டு: மருத்துவமனையில் கம்பி திருட்டு.. வாலிபர் கைது

அணைக்கட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 20 கோடி மதிப்பில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக இரும்பு கம்பிகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் இரும்பு கம்பிகளை திருடிச்சென்றுள்ளார். 

இதை பார்த்த பாதுகாவலர் ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து அணைக்கட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரத் அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர், அணைக்கட்டு காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் விக்னேஷ் (வயது 21), என்பதும், கடந்த ஒரு மாதமாக கடன் கணக்கில் இரும்பு கம்பிகளை திருடிச்சென்றதும் தெரியவந்தது. 

இதனையடுத்து காவலாளி மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி