வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை (பிப். 23) தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கோடை வெப்பத்தைத் தவிர்க்க பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. க்யூ ஆர் கோடு (QR Code) உள்ள 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 900 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் விசில் வடிவில் நின்ற தவெக நிர்வாகிகள் "மக்கள் மன்னன் வருக..வருக.." என விஜயை வரவேற்க திட்டமிட்டுள்ளனர்.