வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே வேப்பங்கனேரி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த தொடர் கன மழையால் முழு கொள்ளளவை எட்டி கோடி சென்றது. கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி முழுவதுமாக நிரம்பியதால் கிராம மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏரி நிரம்பியதை ஒட்டி மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜைகள் செய்து, ஆடு வெட்டி, மலர்கள் தூவி திருவிழா போல் கிராம மக்கள் கொண்டாடினர்.