வேலூர்: சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய.. வங்கதேச பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை

வங்காளதேசத்தைச் சேர்ந்த முஸ்கான் (39) என்பவர், 2018-ல் 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக வேலூருக்கு அழைத்து வந்து, அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். விடுதியில் இருந்து தப்பி வெளியே வந்த சிறுமியை முஸ்கான் தாக்கியுள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வேலூர் வடக்கு போலீசார் முஸ்கானை கைது செய்தனர். இது தொடர்பான போக்சோ வழக்கு வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன், முஸ்கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி