குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சி மூனாப் டிப்போ பகுதியில் பீடி வேலை செய்து வந்த மௌலா (50) என்பவரின் ஓலை வீட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகரக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.