வேலூரில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் வில்வித்தை, நீச்சல், சதுரங்கம், கையுந்துபந்து, கால்பந்து, தடகளம் மற்றும் கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொள்ளலாம்.

விளையாட்டு பயிற்சி காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கம், குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒடுகத்தூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கணியம்பாடி -அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடக்கிறது. ஒவ்வொரு மையத்துக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி