கே.வி.குப்பம் அருகே கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் பலி!

கே. வி. குப்பம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் யோகானந்தன் மனைவி சாந்தினி (27) என்ற கர்ப்பிணி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த கே. வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சாந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி