ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்திற்குள் நேற்று வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஆண் மயில் ஒன்று நுழைந்துள்ளது. அந்த மயிலை கண்ட தெரு நாய்கள் துரத்தி கடித்து குதறியுள்ளன. இதில் மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் மயிலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.