அன்றிரவு சுரேகாவிற்கு (இரட்டை) 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஒரு குழந்தை எடை குறைவாக இருந்ததால் 2 குழந்தையும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தையை செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். இதில் ஒரு குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு தாய் சுரேகாவிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு குழந்தையை தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சுரேகா தனது மற்றோரு குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (30. 09. 2024) மாலை 5. 30 மணியளவில் பிரவச வார்டில் உள்ள 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றுள்ளார்.
அப்போது, பிரவச வார்டு கட்டிடத்தின் போர்டிகோ மீது விழுந்துள்ளார். பின்னர் அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுரேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.