வேலூர் அருகே தீப்பற்றி எறிந்த சொகுசு பேருந்து

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே இன்று (மே. 14) தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் வினோத் குமார் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி