ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, குடியாத்தம் பாக்கம் ஏரிக்கரை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த சிவக்குமார் (48) படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து பரதராமி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.