வெளியூர் ஆட்டோ ஓட்டுநர்களை தடுத்து நிறுத்திய உள்ளூர் ஓட்டுநர்கள். வேலூர் மாவட்டம் கோவட்டம் பகுதியில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக வெளியூரில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்களை தடுத்து நிறுத்தி நாங்கள் இங்கு நீண்ட காலமாக ஆட்டோ இயக்கி வருகிறோம். வெளியூர் ஆட்டோக்கள் இங்கு வந்து செல்வதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வெளியூர் ஆட்டோக்களை இந்த பகுதிகளில் அனுமதிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு காணப்பட்டது.