மீண்டும் வேலைக்கு வராததால் தனது நம்பர் அவரை தொடர்பு கொண்டுள்ளார். போன் எடுக்காத நிலையில் அவரை தேடி வீட்டிற்க்கு வந்து பார்க்க முயற்சித்த போது அவர் வீடு உள்ளே பூட்டி இருந்த நிலையில் சந்தேகமடைந்த வீட்டின் கதவு உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மர்மாமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உடனே இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செல்போனுக்கு சார்ஜ் போடும் போது தவறுதலாக மின்சாரம் தாக்கி பலியாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.