கே வி குப்பம்: வழித்தகராறில் பெண் மீது தாக்குதல்- 3 பேர் கைது

கே. வி. குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60). அதேப்பகுதியில் உள்ள கானாறு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழியாக மணி மனைவி ஆண்டாள் (60) நிலத் துக்கு கடலை விதைக்க கொண்டு வந்தடிராக்டரை, வெங்கடேசன், அவரது மகள் மல்லிகா (35), இவரின் தம்பி சந்தோஷ் (21) ஆகியோர் தடுத்து நிறுத்தி தகராறு செய்து, ஆண்டாளை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ஆண்டாள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து கே. வி. குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சீதா வழக்குப்ப திவு செய்து வெங்கடேசன், மல்லிகா, சந்தோஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி