கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. டோக்கனை பெற்றுக் கொண்டு உணவு சாப்பிடுவதற்காக பக்தர்கள் முண்டியடித்துச் சென்றனர். அப்போது 2 பெண்களிடம் 7 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்யவில்லை. எனினும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.