வேலூர் கலால் துணை ஆணையர் முருகன், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா ஆகியோர் தலைமை தாங்கினர். 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 1, 500-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கலந்து கொண்டு 100 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இதில் ஆம்பூர் வில்வநாதன் எம். எல். ஏ. , மாவட்ட ஊராட்சி தலைவர் மு. பாபு, கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.