வேலூரில் இன்று தி. மு. க. அவசர செயற்குழு கூட்டம்

வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் (இன்று) வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் தி.அ. முகமதுசகி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளை அனுசரிப்பது, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி