அணைக்கட்டு: வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நந்தகுமார் எம். எல். ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு வரவேற்று பேசினார்.

ஒன்றியக்குழு தலைவர் சி. பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் சித்ராகுமார பாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணன் மேனன். ஒன்றிய அலுவலக மேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 51 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 80 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை நந்தகுமார் எம். எல். ஏ. வழங்கி பேசினார்.

இதனையடுத்து அணைக்கட்டு தாலுகாவில் முதியோர் ஓய்வூதியம் பெறும் 26 ஆயிரம் பேருக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி அணைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்புடைய செய்தி