வேலூர்: மாமூல் கேட்ட வழக்கில் 6 பேர் மீது வழக்குப்பதிவு

வேலுார் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கூறி, த.வெ.க. நிர்வாகி விஜயகுமார் மாமூல் கேட்டதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம் புகாரின்பேரில் விஜயகுமார் உள்ளிட்ட 3 பேர் மீதும், விஜயகுமார் புகாரின்பேரில் சண்முகம் உள்ளிட்ட 3 பேர் மீதும் வேலுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி