பள்ளிகொண்டா அருகே அண்ணன் பல்லை உடைத்த தம்பி கைது

பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ராமானுஜத்தின் மகன்களான வடிவேல் (48) மற்றும் ஆனந்தவேல் (38) இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த தம்பி ஆனந்தவேல், அண்ணன் வடிவேலுவை கல்லை எடுத்து சரமாரியாக தாக்கியதில் அவரது பற்கள் உடைந்தன. இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் ஆனந்தவேலை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி