வேலூர்: பேருந்து மீது மோதி மாணவன் பலி

வேலூர் மாவட்டம் லத்தேரியில், பனமடங்கி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லோகேஷ் (16) என்ற மாணவன், நேற்று பாறையூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து லத்தேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி