அதை நம்பி அவரும் லைக் செய்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பி உள்ளார். அதற்காக அவருக்கு ரூ. 750 கமிஷன் கிடைத்தது. பின்னர், டெலிகிராம் மூலம் மர்மநபர்கள் அவரை தொடர்புகொண்டு ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவுசெய்து முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என கூறினர். அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் பல கட்டங்களாக ரூ. 5 லட்சத்து 65 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். அதற்காக அவருக்கு ரூ. 10 ஆயிரத்து 400 கமிஷனாக கிடைத்துள்ளது. மீதம் உள்ள அவரது பணத்தை அவர் எடுக்க முயன்றார். ஆனால் அவரால் எடுக்க முடியவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மர்மநபர்களிடம் கேட்டபோது மேலம் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.