ராணிப்பேட்டை: கூட்டுறவு சங்கத்தில் ரூ. 7.83 கோடி பணம் கையாடல்..

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கோடி கணக்கில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் கூட்டுறவு அதிகாரிகள் சங்கத்தில் ஆய்வு செய்த நிலையில் செயலாளர் சங்கர் மற்றும் கேசியர் பாரதி ஆகியோர் கடந்த 2018 முதல் 2023 வரை ரூபாய் 7. 83 கோடி பணம் கையாடல் செய்திருப்பது தெரிந்தது.

இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த. இருவர் மீதும் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்த நிலையில், இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி