அதன் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மரத்தின் கீழ் கும்பலாக 6 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர்கள் கந்தனேரியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 47), சிங்காரவேலன் (62), கழனிபாக்கத்தை சேர்ந்த கவியரசன் (40), ராமச்சந்திரன் (41) ரஞ்சித்குமார் (34) கோவிந்தராஜ் (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சூதாட்டத்தில் அவர்களை கைது செய்த போலீசார், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ. 5000 மற்றும் சீட்டுகட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.