குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் நேற்று (ஜூன் 5) மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது சிலர் கையில் கத்தியை வைத்து கொண்டு பொதுமக்களை மிரட்டி கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் போலீசார் தகராறில் ஈடுபட்ட முருகன் (49), விக்னேஸ்வரன் (26), மோனீஷ்குமார் (25), மஞ்சுநாதன் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.