வேலூர் அருகே மினி லாரி மோதி 2 பேர் பலி

வேலுார் மாவட்டம், சின்னபாலம்பாக்கத்தை சேர்ந்த சரவணன், அவரது உறவினர்கள் நவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஏப்ரல் 5 இரவு 8 மணியளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே பாளைய ஏகாம்பரநல்லுார் சாலையில், வெள்ளூர் கொல்லை மேட்டை சேர்ந்த உதயபாஸ்கர் (42) ஓட்டி வந்த மினி லாரி, அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணன் மற்றும் நவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 வயது சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி